Skip to main content

இன்று மே 29

மே 29

நிகழ்வுகள்

1453 - ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

1660 - இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி
சூடினான்.

1677 - வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

1727 - இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.

1780 - அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர்.

1790 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1848 - விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1864 - மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான்.

1867 - ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.

1869 - பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.

1886 - வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.

1903 - சேர்பியாவின் மன்னன் அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அராசி திராகா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

1914 - புனித லோரன்ஸ் வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து பயணிகள் ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர்.

1919 - ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.

1947 - இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.

1953 - முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.

1972 - டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

1982 - இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1985 - பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மைதானத்தீன் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1988 - அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார்.

1990 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.

1999 - டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.

1999 - 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர்.

2005 - ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

பிறப்புகள்

1872 - சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)

1917 - ஜோன் எஃப். கென்னடி, ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)

1984 - கார்மெலோ ஆந்தனி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1500 - பார்த்தலோமியூ டயஸ், போர்த்துக்கேய நாடுகாண் பயணி

1892 - பஹாவுல்லா, பஹாய் மத தாபகர் (பி. 1817)

1987 - சரண் சிங், இந்தியக் குடியரசின் ஏழாவது பிரதமர் (பி. 1902)

1994 - எரிக் ஹோனெக்கர், கிழக்கு ஜெர்மனியின் கடைசி அதிபர் (பி. 1912)


சிறப்பு நாள்

நைஜீரியா - மக்களாட்சி நாள் (1999)

ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு