Skip to main content

இன்று மே 26

மே 26 

நிகழ்வுகள்

1293 - ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1538 - ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின்
ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
1637 - பீக்குவாட் போர்: புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.
1838 - கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
1879 - ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.
1896 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.
1912 - இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
1917 - இலினொய்யில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.
1918 - ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1958 - இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
1966 - பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1969 - அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
1983 - ஜாப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.
1987 - யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
1991 - தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.
2002 - மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

பிறப்புகள்

1799 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்யக் கவிஞர் (இ. 1837)
1884 - மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர்
1943 - மனோரமா தமிழ் நாடக, திரைப்பட நடிகை.
இறப்புகள்[தொகு]
1989 - கா. அப்பாத்துரை, தமிழறிஞர்

சிறப்பு நாள்

அவுஸ்திரேலியா - தேசிய மன்னிப்பு நாள்
போலந்து - அன்னையர் நாள்
ஜோர்ஜியா - தேசிய நாள்

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன