Skip to main content

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

இதுவரை 27,966 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர
விண்ணப்ப விநியோகம் கடந்த புதன்கிழமை (மே 14) தொடங்கியது. இதுவரை மொத்தம் 27,966 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். விண்ணப்ப விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (மே 25) கிடையாது.

ஜூன் 2 கடைசி: விண்ணப்பங்களைப் பெற மே 30-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர கடைசி நாள் ஜூன் 2-ஆம் தேதியாகும். இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளன.

ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்களில் பலர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். மறு மதிப்பீட்டுக்குப் பிறகு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை ஜூன் 10-ஆம் தேதிக்குள் அளிப்பதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் மறு மதிப்பீடு மதிப்பெண்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் கிடைத்து விட்டால், ஜூன் 12-ஆம் தேதி எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா