Skip to main content

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர வசதியாக நடத்தப்பட உள்ள உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. 
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. இதில் 91.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள்
உடனடியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றால் இந்த ஆண்டே தங்களது உயர்கல்வியை தொடர முடியும். இதற்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் இறுதியில் நடைபெற உள்ளது. துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தவிர கூடுதலாக ரூ.50ஐ பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பம் எதுவும் கிடையாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்