Skip to main content

கலை, அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கலை அறிவியல் படிப்பில் சேரும் வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது.

கலை அறிவியல் படிப்பிற்கு அடுத்தபடியாக என்ஜினீயரிங் பட்டப்படிப்பிலும்,
பாலிடெக்னிக் படிப்பிலும்தான் அதிகம் பேர் சேர்கிறார்கள். குறிப்பாக பாலிடெக்னிக் படிப்பில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற உடன்தான் அதிக மாணவர்கள் சேர்கிறார்கள். பிளஸ்-2 முடித்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் சேர்கிறார்கள்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம், நர்சிங், பிஸியோதெரபி, மருந்தாளுனர் படிப்பு, வேளாண்மை ஆகிய படிப்புகளில் குறைந்த மாணவர்களே சேர்கிறார்கள். மருத்துவப்படிப்பில் மட்டும் அதிகம் பேர் சேர விரும்புகிறார்கள். ஆனால் மருத்துவப்படிப்பில் சேர குறைந்த இடங்களே உள்ளன.

பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து இருக்கிறார். இந்த முடிவு வருவதையொட்டியும் மதிப்பெண் எடுப்பதையொட்டியும் பெரும்பாலான மாணவ-மாணவிகள் தங்கள் படிக்க உள்ள மேல்படிப்பை முடிவு செய்கிறார்கள். கலை அறிவியல் படிப்புகளில் பல புதிய படிப்புகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் படிப்புகள் ஆகும். 

எனவே கடந்த வருடம் கலை அறிவியல் படிப்பில் மாணவ-மாணவிகள் சேரும் ஆர்வம் அதிகரித்தது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 635 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் கடந்த வருடம் 2 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கிறார்கள். 

இந்த வருடம் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர தமிழ்நாடு முழுவதும் மே முதல் வாரத்தில்தான் விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட உள்ளன.



Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா