Skip to main content

டெஸ்க்டாப் மேலாக பைல்களைப் பதியலாமா?

விண்டோஸ் இயக்க முறைமையை அதன் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகிறேன். அதில் உருவாக்கப்படும் பைல்களை, டெஸ்க்டாப் மேலாக சேவ் செய்திடும் செட் அப் எதிலும் இல்லை. மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தான் அவை சேவ் செய்யப்படும். ஆனால், நம்மில் பலர், டெஸ்க்டாப் மேலாகப் பைல்களைப் பதிவதனையே பழக்கமாகக் கொண்டுள்ளோம். இது நல்ல பழக்கமா? இல்லையா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று
பார்க்கலாம்.
டெஸ்க்டாப்பில் பைல்களைப் பதிவு செய்து வைப்பதற்கு முதல் காரணம், இந்த பைல்களை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளலாம் என்பதே. நம் கண்கள் முன்பு இவை எப்போதும் காட்சி தரும் அல்லவா? எனவே தான் பலரும் பைல்களை இதில் சேவ் செய்கின்றனர்.
ஆனால், டெஸ்க்டாப்பில் பைல்களை சேவ் செய்யக் கூடாது என்பதற்குப் பல நல்ல காரணங்கள் உள்ளன. முதல் காரணம், இவற்றை வகைப்படுத்த முடியாது. குழுவாக அமைத்து வைக்க முடியாது. பெயர் மற்றும் பைல் உருவான நாள் அடிப்படையில், இவற்றை வகைப்படுத்த முடிந்தாலும், வேறு எந்த வகையிலும் இவற்றை ஒழுங்கு செய்திட முடியாது. எனவே, நாம் போல்டர்களில் எளிதாகத் தேடி அறியும் வழிகளை இங்கு பயன்படுத்த இயலாது.
மேலும் இந்த பைல்களுக்கு மேலாக, அப்ளிகேஷன் விண்டோக்கள் இருப்பதால், பைல்களைக் காண இயலாது. இந்த விண்டோக்களைச் சிறியதாக வைத்திடவும், மறைத்திடவும் வழிகள் இருந்தாலும், அவை இன்னொரு பிரச்னையும் தரும் வாய்ப்பு உண்டு.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள், லைப்ரரீஸ் பிரிவில் உள்ள மற்ற போல்டர்களான My Documents and My Pictures போன்றவற்றில் உள்ளவற்றைப் போல பாதுகாப்பானவை இல்லை. நீங்கள் ஏதேனும் காரணத்திற்காக சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்தினால், விண்டோஸ் இயக்கத்தினை ஒரு குறிப்பிட்ட நாளன்று இருந்தபடி அமைத்தால், அந்த நாளுக்குப் பின்னர், நீங்கள் உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்த பைல்கள் மீட்கப்பட மாட்டாது. 
மேலும், பல பேக் அப் புரோகிராம்கள், மாறா நிலையில், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை பேக் அப் செய்திடாது. இது போன்ற பேக் அப் புரோகிராம்கள், டெஸ்க்டாப் பைல்களுக்கும் பேக் அப் எடுக்க வேண்டும் என விரும்பினால், அவற்றின் செட் அப் அமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். முதலில் டெஸ்க்டாப்பினை Documents libraryயில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் சிஸ்டம் ரெஸ்டோர் செயல்படுகையில், டெஸ்க் டாப் பைல்களும் திரும்பக் கிடைக்கும். இதற்கு முதலில் Windows Explorer (File Explorer in Windows 8), செல்லவும். அங்கு Library பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Documents என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Include a folder என்பதில் கிளிக் செய்து, பின்னர் desktop என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது Navigation பேனல் மேலாக, Favorites என்பதின் கீழ் இருக்கும்.
நீங்கள் புரோகிராம்கள், மாறா நிலையில், அவற்றின் பைல்களை டெஸ்க்டாப்பில் சேவ் செய்யப்பட வேண்டும் எனத் திட்டமிட்டால், Library பிரிவில், டெஸ்க்டாப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Set save location என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், வேர்ட், எக்ஸெல் என எந்த அப்ளிகேஷனில் நீங்கள் பைல் தயாரித்தாலும், அது டெஸ்க்டாப்பில் தான் சேவ் செய்யப்படும். ஆனால், விடியோ, ஆடியோ, போட்டோ பைல்கள் இங்கு சேவ் செய்யப்படாது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு