Skip to main content

தமிழகத்தில் 73 சதவீத ஓட்டுப்பதிவு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் சராசரியாக 73 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதே போல், மேற்கு வங்கத்தில் 6 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 82 சதவீத ஓட்டுகள் பதிவாகின. உ.பி.,யில் 12 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 58.58
சதவீத ஓட்டுப்பதிவும், ம.பி.,யில் 10 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 64.4 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானில் 5 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 59.2 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மகாராஷ்டிராவில் 19 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 55.33 சதவீத ஓட்டுகளும், சட்டீஸ்கரில் 62.5 சதவீத ஓட்டுகளும், பீகாரில் 7 இடங்களுக்க நடந்த தேர்தலில் 60 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. ஜார்கண்டில் 4 இடங்களுக்க நடந்த தேர்தலில் 63.4 சதவீத ஓட்டுகளும், அசாமில் 6 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 77.05 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2