Skip to main content

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
இதில் பிளஸ் 1 வகுப்புக்கு தகுதிவாய்ந்த முதுகலை மற்றும் தொழில் கல்வி ஆசிரியர்களை கொண்டும் உரிய ஆசிரியர்கள் இல்லையென்றால் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை வரவழைத்தும் தலைமை ஆசிரியர்கள் முழுபொறுப்பேற்று மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.
மேலும் பிளஸ் 1 தேர்ச்சி முடிவுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே வெளியிட வேண்டும்.

இதில் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களில் 5 சதவீதம் தலைமை ஆசிரியரே மறுமதிப்பீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்ச்சி முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று மே 5ம் தேதிக்குள் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான கூட்டம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2