Skip to main content

குரூப் 4 தேர்வுக்கான கவுன்சலிங் தேர்வாளர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. புது அறிவிப்பு

பொது, பிசி மற்றும் எம்பிசி பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளத்தில் கலந்தாய்வு முடிவில் அன்றை தினம் வெளியிடப்படும், இனவாரியான எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய செய்தியினை ஆய்ந்து உறுதி செய்து அவரவர் பிரிவில் காலி பணியிடங்கள் இருந்தால் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14ம் ஆண்டுக்கான குரூப் 4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிக்கான தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் அனைத்து பிரிவுகளை சார்ந்த பொது காலி பணியிடங்களுக்கு (3288 காலி பணியிடம்) முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. முதல் ஆறாயிரம் தர வரிசையில் உள்ள எல்லா விண்ணப்பதாரருக்கும், கடந்த 1ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை (ஒவ்வொரு நாளும் 300 பேர் என்ற அடிப்படையில்) முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு வருமாறு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை (நேற்று வரை) நடைபெற்ற கலந்தாய்வு மூலம், பொது காலிபணியிடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான காலி பணியிடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான காலி பணியிடங்கள் ஆகிய பணியிடங்கள் தக்க விண்ணப்பதாரால் நிரப்பப்பட்டுவிட்டன. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தேர்வாணைய இணையதளத்தில் கலந்தாய்வு முடிவில் அன்றை தினம் வெளியிடப்படும் இனவாரியான எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய செய்தியினை ஆய்ந்து உறுதி செய்து அவரவர் பிரிவில் காலி பணியிடங்கள் இருந்தால் மட்டுமே அவரவர் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா