Skip to main content

பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்கள் மூலமும் மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம்

வரும், மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம்: மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.inஆகிய மூன்று
இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம். நான்காவதாக, www.dge1.tn.nic.in, என்ற இணையத்திலும், "ஸ்மார்ட் போன்' மூலம், முடிவைப் பார்க்கலாம்.

இணையதளத்தில் பார்க்க, தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவை, மதிப்பெண்களுடன், 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம். இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது. மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2