Skip to main content

20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’

பெட்ரோலுக்கு விடையளிக்கும் நேரம் நெருங்கி விட்டது: 20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ அறிமுகம்

ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான ‘டெர்ரா மோட்டார்ஸ்’ மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம்
செய்துள்ளது.

‘கிவாமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக், ’லித்தியம் இயான்’ பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. 6 மணி நேரத்துக்கு இந்த பேட்டரியை ‘ரீ-சார்ஜ்’ செய்வதன் மூலம், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை, தொடர்ந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்குதடை இன்றி செல்ல முடியும்.

கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் 20 ஆயிரம் ‘கிவாமி’ பைக்குகளை விற்று சாதனை படைத்துள்ள டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையிலும் கால் பதித்துள்ளது. இந்தியாவில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்து விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் 'கிவாமி' பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோரு டோகுஷிகே தெரிவித்தார்.

'இந்த வாகனத்தின் பேட்டரியை சராசரி மொபைல் சார்ஜர் பாயின்டிலும் ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். முழுமையாக (6 மணி நேரம்) ரீ-சார்ஜ் செய்வதற்கு வெறும் 6 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். இந்த ஆற்றலை கொண்டு 3 ஆயிரம் முறை வரை ‘ஸ்ட்ராட்’ செய்து சுமார் 200 கிலோ மீட்டர் வரை 'நான் ஸ்டாப்' ஆக பயணிக்கலாம்’ என்றும் இந்த பைக்கின் அறிமுக விழாவில் அவர் நிருபர்களிடம் கூறினார்.

முதல் கட்டமாக நேரடியாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யவும், 2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிலேயே தயாரிப்பை தொடங்கவும் டெர்ரா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. நேரடியாக இறக்குமதி செய்யப்படும் ‘கிவாமி’ பைக்கின் அறிமுக விலை டெல்லி சந்தை நிலவரப்படி 18 லட்சம் ரூபாய் என்றும், இந்தியாவில் உற்பத்தி தொடங்கிய பிறகு இந்த விலை வெகுவாக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒரு யூனிட்டிற்கு 6 ரூபாய் வரை செலுத்துகிறார்கள். இந்த வகையில் கணக்கிட்டாலும், 6 யூனிட் ரீ-சார்ஜுக்கு 36 ரூபாய் செலவாகும். இந்த குறைந்த செலவில் 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என்ற அறிவிப்பை வைத்து பார்க்கப் போனால், ஒரு கிலோ மீட்டருக்கான எரிபொருள் செலவு வெறும் 18 பைசா தான் என்பது மகிழ்வூட்டும் செய்திதான் என்றாலும், 18 லட்சம் ரூபாய் விலை என்பது சாமானிய மக்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்