Skip to main content

இன்று(20/04/2014)

ஏப்ரல் 20

நிகழ்வுகள்

1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.

1653 - ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

1657 - அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.


1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.

1792 - பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன.

1859 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.

1862 - லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.

1902 - பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.

1914 - ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.

1926 - திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.

1945 - அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.

1961 - கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.

1967 - சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.

1968 - தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.

1972 - அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.

1978 - தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.

1998 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

1998 - 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.

1999 - கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.

2007 - டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.




பிறப்புகள்


570 - முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப்படவில்லை)

1808 - மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)

1889 - அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945)

1910 - சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)

1918 - காய் சீக்பான், நோபல் பரிசு பெற்றவர்

1927 - கார்ல் முல்லர், நோபல் பரிசு பெற்றவர்

1939 - பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)

1950 - நா. சந்திரபாபு நாயுடு, இந்திய அரசியல்வாதி


இறப்புகள்

1918 - கார்ல் பிரவுன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1850)

2003 - பேர்னார்ட் காட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)




Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.