Skip to main content

TNPSC: தெரிந்து கொள்வோம் ---- நீர்

# நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜனின் எடை இயைபு விகிதம் - 1:8

# நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கன அளவு இயைபு விகிதம் - 2:1

# நீர் மூலக்கூறில் வேதியியல் பெயர் - ஹைட்ரஜன் மோனாக்சைடு அல்லது
ஆக்சிஜன் ஹைட்ரைடு.

# நீரின் கன அளவு இயைபை கண்டறியும் சோதனையின் பெயர் - ஹாப்மன் முறை

# நீரின் கன அளவு இயைபைக் கண்டறிய உதவும் உபகரணத்தின் பெயர் - ஹாப்மன் வோல்டா மீட்டர்

# ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை - 0 டிகிரி செல்சியஸ்

# ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் கொதிநிலை - 100 டிகிரி செல்சியஸ்

# தூய நீர் மின்னோட்டத்தைக் கடத்துமா - கடத்தாது

# பனிக்கட்டி நீரில் மிதக்கக் காரணம் - 0 டிகிரி செல்சியசில் ஒருகுறிப்பிட்ட நிறையை உடைய பனிக்கட்டியின் பருமன் அதே நிறையை உடைய நீரின் பருமனை விட அதிகம்.

# கடல்நீரில் உப்பின் சதவீதம் - 3.5 சதவீதம்

# கடல் நீரில் அதிகமாகக் காணப்படுவது - சோடியம் குளோரைடு (2.8 சதவீதம்)

# கடல்நீரிலிருந்து உப்புக்கள் எந்த முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது - ஆவியாதல் முறையின் மூலம்

# அயோடின் பற்றாக்குறையால் உருவாகும் நோய் - முன் கழுத்து கழலை

# கடல் நீரிலிருந்து தூய நீர் எந்த முறையின் மூலம் பெறப்படுகிறது - எதிர் சவ்வூடு பரவல் முறை

# நீரேற்று நிலையங்களில் நீரில் உள்ள கசடுகளை வீழ்படிவாக்குவதற்காக நீருடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் - பொட்டாஷ் படிகாரம் மற்றும் சுண்ணாம்பு

# நீரின் மிகப்பெரிய இயற்கை ஆதாரம் - கடல்

# நீரின் அடர்த்தி அதன் பருமனுக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.

# ஹாப்மன் வோல்டா மீட்டரில் நீரை மின்னாற்பகுக்க எதிர்மின்வாயில் ஹைட்ரஜன் வாயும், நேர் மின்வாயில் ஆக்சிஜன் வாயுவும் சேகரமாகும்.

# நீர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆனது என்று கண்டறிந்தவர் - ஏ.எல்.லவாய்சியர் (1783)

# இரு கன அளவு ஹைட்ரஜனும், ஒரு கன அளவு ஆக்சிஜனும் சேர்ந்த கலவையை எரி்த்து நீரைத் தயாரித்தவர் - ஹென்றி காவண்டிஷ் (1781)

# உள்ளுறை வெப்பத்தின் அலகு - கலோரி/கிராம்

# நுண்ணுயிரிக் கொல்லியாகப் பயன்படுவது - சலவைத் தூள்

# உறையும்போது கன அளவு அதிகரிக்கும் பொருள் - நீர்

# இந்தியாவில் நீர் மாசுபாடு அடைந்திருப்பதன் சதவீதம் - 70 சதவீதம்.

# அமிலம் கலந்த நீரை மின்னாற்பகுக்கும்போது ஹைட்ரஜனும்,ஆக்சிஜனும் கிடைக்கிறது.

# நீரின் மூன்று நிலைகள் - திட, திரவ, வாயு

# 4 டிகிரி செல்சியத்தில் நீரின் அடர்த்தி 1 கிராம்/கன சென்டிமீட்டர் என்றால் பனிக்கட்டியின் அடர்த்தி - 0.91 கிராம்/கன சென்மீட்டர்

# தண்ணீரைப் பற்றியும் அதன் விரவலைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு - நீரியல் (ஹைட்ராலஜி)

# தொழிற்சாலைக் கழிவுகளில் உள்ள கரிம மாசுக்களை காற்றில் உள்ள பாக்டீரியாக்களைக் கொண்டு சிதைந்த பின்னரே அக்கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்