Skip to main content

கணினி அறிவியலில் அதிக மதிப்பெண் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

"பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக அமைந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர்.


இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியரின் கருத்து:


பெனாசீர், மாணவி, ஜோதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை: அனைத்து வினாக்களும் 'புளு பிரின்ட்' அடிப்படையில் தான் கேட்கப்பட்டன. தொகுதி1 மற்றும் தொகுதி2ல் இருந்து சம அளவில் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, 'சி++', 'ஸ்டார் ஆபீஸ் ரைட்டர் ஓர் அறிமுகம்', ஆகிய பாடங்களில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் வந்திருந்தன. அதேபோல், 35 மதிப்பெண்களுக்கான ஐந்து மார்க் வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக தான் இருந்தன. 150க்கு 140க்கும் மேல் எளிதாக எடுக்க முடியும்.


அஜ்மீர், மாணவர், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மதுரை: தொகுதி1ல் உரை வடிவூட்டல், அட்டவணையில் வேலை செய்தல், பல்லூடகம் அறிமுகம் ஆகிய பாடங்களிலும் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்பட்டன. 76, 77, 79 மற்றும் 86 ஆகிய கட்டாய வினாக்கள் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாக அமைந்திருக்கும்.


கார்த்திக், ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தா.வாடிப்பட்டி: சுமாராக படிக்கும் மாணவர்கள் கூட, எளிதாக 70 மதிப்பெண் எடுக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. ஒரு மதிப்பெண் வினாவில், 5 வினாக்கள் யோசித்து எழுதும் வகையில் அமைந்திருந்தன. 2 மதிப்பெண் வினாவில் 25 கொடுத்து, 20 வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும். இதில், 21 வினாக்கள் எளிமையாக அமைந்திருந்தன. 5 மதிப்பெண் பகுதியில், 10க்கு 7 வினாக்கள் எழுத வேண்டும். இதில், 7 வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக இருந்தன. இத்தேர்வில், 190 மதிப்பெண் வரை மாணவர்கள் எளிதாக பெறலாம், என்றார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா