Skip to main content

ஓய்வூதியம் திட்டம் தொடர்பான பணிகள்: தகவல் தொகுப்பு மையத்தில் ஒப்படைப்பு

அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகள், தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, துணை மாநில கணக்காயர் (நிதி), வாஷினி அருண் விடுத்துள்ள அறிக்கை: மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில், இது நாள் வரை பராமரிக்கப்பட்டு வந்த, 'அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' தொடர்பான பணிகள் (புதிய எண் வழங்கல் மற்றும் கணக்கு பராமரிப்பு) அனைத்தும், ஜனவரி, 1 முதல், தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி, 2013 - 14 ஆண்டு கணக்கு முதல், இத்திட்டம் தொடர்பான பணிகள் அனைத்தும், அரசு தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படும். மேலும், 2012 - 13ம் ஆண்டிற்கான சந்தாதாரர்கள், அனைவரின் கணக்கு விவரப் பட்டியல்கள், அந்தந்த கருவூல அலுவலர்கள் மூலம், வரைவு மற்றும் வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்புவதற்காக, சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இனி, அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த விவரங்களுக்கு, சந்தாதாரர்கள், 'ஆணையர், அரசு தகவல் தொகுப்பு மையம், சென்னை' என்ற முகவரியில், தொடர்பு கொள்ளவும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி