Skip to main content

பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து

'தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது,' என, மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.


எம்.கார்த்திகேயன், மாணவர், அச்சுதா அகாடமி மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: 'ப்ளு பிரிண்ட்' படி, கேள்விகள் கேட்கப்பட்டது. ஒரு மதிப்பெண் பயிற்சி வினாக்கள் அனைத்தும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில், ஒன்பதாவது கேள்வி பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. நான்கு மதிப்பெண் பகுதியில், 39 வது கேள்விக்குரிய பதில் தெரிந்திருந்தாலே, 9 ம் கேள்விக்கும் பதில் அளித்துவிடலாம். மொத்தத்தில் தேர்வு எளிதாக இருந்தது.


பி.சக்திபிரீத்தி, மாணவி, எஸ்.எம்.பி.எம்., மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: பாடத்தின் பின்புறத்தில் உள்ள பயிற்சிகள், கேள்விகளை முழுமையாக படித்திருந்தால், 95 மதிப்பெண்கள் மேல், பெற முடியும். எட்டு மதிப்பெண் பகுதியில் ஏற்கனவே நடந்த தேர்வுகளில் பலமுறை இடம் பெற்ற கேள்வியே கேட்கப்பட்டதால், எளிதில் பதில் அளிக்க முடிந்தது. செய்யுள் மனப்பாட பகுதி கேள்வியும் எளிதாக இருந்தது.


பெ.கோவிந்தராசு, ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, க.புதுக்கோட்டை: பிளஸ் 2 வை போல், 'பார்கோடு' முறை இருந்தது. மெதுவாக கற்றல் மாணவர்கள் கூட, எளிதில் தேர்ச்சி பெறும் வகையில், வினாக்கள் இருந்தது. இந்தமுறை நன்றாக படிக்க கூடிய மாணவர்கள், 90 மதிப்பெண்கள் மேல், பெற முடியும். பிரிவு நான்கில் உரைநடை பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி, யார் வேண்டுமானாலும் எழுதமுடியும். கேள்விகள் அனைத்தும் புத்தகத்தில் பின்பக்கத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்து. ஏற்கனவே பலமுறை இடம் பெற்ற கேள்விகளே, அதிகளவில் இருந்தது. இதைவிட எளிமையான வினாத்தாள் அமைய முடியாது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா