Skip to main content

தொடக்கக்கல்வித்துறையில் விரைவில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.இதுகுறித்து நமது பொதுச்செயலர் திருமிகு செ முத்துசாமிஅவர்கள் ஏற்கனவே தொடக்கக்கல்வி இயகுனரிடம் முறையிட்டது அனைவரும் அறிந்ததே,


இந்நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டததை அடுத்து இயக்குனரகத்தை நமது பொதுச்செயலர் பொதுச்செயலர் திருமிகு செ முத்துசாமி தொடர்புகொண்டு அதுபற்றி விசாரித்ததில் இருக்கின்ற மொத்தமுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் குறிப்பிட்ட விகிதாச்சாரத்திலேயே பதவிஉயர்வு மூலம் நிரப்பப்படவேண்டும் .மீதமுள்ளதை நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிக காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு சில நாட்களில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.என கூறினார்
மேலும் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாநில பதிவு மூப்பு என்பதால் மொத்தபட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தில் இத்தனை நேரடி நியமனத்திற்கு போக மீதம் பதவி உயர்வுக்கு என கண்டறிவது எளிது.எனவே அங்கு இன்று கலந்தய்வு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்