Skip to main content

ஆசிரியர்கள் 'லீவ்' போராட்டம்: 'பிசுபிசுக்க' அதிகாரிகள் திட்டம்

தமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 'பிசுபிசுக்க' வைக்க, ஆசிரியர் பயிற்றுனர்கள் பாடம் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பிப்., 26ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிப்.,25ல் உள்ளிருப்புப் போராட்டமும் நடக்கிறது. ஒரே நாளில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் வரை விடுப்பு எடுப்பதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதைத் தவிர்க்கும் வகையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம்(பி.ஆர்.டி.,), பிப்.,25 மற்றும் 26ல், தொடக்கப் பள்ளிகளில் பாடம் நடத்த கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்