Skip to main content

இடைநிலை ஆசிரியர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இந்தப் போராட்டத்தில் 750 பேர் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சி.அரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு ஏற்றத் தர ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 மற்றும் 26-ம் தேதிகளில் மாநிலம் தழுவிய 2 நாள் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அறிவித்திருந்தது.
அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை பள்ளியில் வகுப்பு எடுக்காமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்