Skip to main content

இன்று தேசிய அறிவியல் தினம்

அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம் தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று
போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது' என்பதை கண்டுபிடித்தார். இந்த நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

எல்லாம் அறிவியலின் பயன்: இருளை விரட்டிய மின்விளக்கு, தூரத்தில் இருந்தாலும் உரையாட தொலைபேசி, என்ன வேலைகளையும் செய்வதற்கு கம்ப்யூட்டர், மரங்களில் நிழல்களை தங்கிய மனிதனுக்கு உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டடங்கள், எங்கு வேண்டுமானாலும் செல்ல விரும்பிய மனிதன் கடலுக்கு நடுவே கூட பாலங்களை அமைத்தது; காலால் நடந்த மனிதன் கால்மணி நேரத்தில் வேறு நாட்டிற்கே (வாகனங்கள்) செல்கிறான். வெள்ளத்தில் இருந்த பாதுகாத்துக்கொள்ள அணைகள், மேலே இருந்து தகவல்களை தருவதற்கு சாட்டிலைட், அறிவியல் ரீதியாக சந்ததியை கண்டுபிடிக்க மரபணு, இலை தழைகளை உடுத்திய மனிதன் தற்போது பல வண்ணங்களில் வடிவங்களில் ஆடைகளை உடுத்துகிறான். பச்சை காய்கறிகளையும், பச்சை மாமிசங்களையும் சாப்பிட்ட மனிதன்; தற்போது உணவை தேர்வு செய்ய நீண்ட பட்டியலை பார்க்கிறான். இதற்கு காரணம் அறிவியல் தான்.

இரண்டும் கலந்ததே:



எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். அதற்காக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது. அறிவியலை ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் "அணுகுண்டால்' உருக்குலைந்த ஜப்பான், இன்று அதே அணுசக்தியால் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் அந்நாட்டின் விஞ்ஞானிகள். நமது நாட்டிலும் மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்று கொள்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அறிவியல் ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் இருந்து ஏற்படுத்த வேண்டும். இதற்கு அறிவியல் பாடப்புத்தகத்தில் தியரியுடன், செய்முறைப்பயிற்சியையும் இணைக்க வேண்டும். செய்முறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்