Skip to main content

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி

சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பயிற்சியை சனிக்கிழமை தொடங்கிவைத்து பேசுகிறார் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன்

.சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் இந்தப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். மொத்தம் 40 நாள்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது

இதில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை வரை மாநிலம் முழுவதும் 652 பேர் பதிவு செய்துள்ளனர். சென்னையில் 250 பேர் பதிவு செய்துள்ளனர். வரும் நாள்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்தப் பயிற்சியில் மேலும் இணைவார்கள் என எதிர்பார்ப்பதாக கண்ணப்பன் கூறினார்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் மார்ச் 5-ம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தேர்வை எழுதுவோருக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், உளவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம் ஆகிய பாடங்கள் தொடர்பாக இந்தப் பயிற்சியில் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன. கல்லூரி விரிவுரையாளர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், பாட வல்லுநர்கள் பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் உத்ராபதி, பிரசன்னகுமார் ஆகிய இரண்டு பார்வையற்ற மாற்றுத் திறனுடைய விரிவுரையாளர்கள் இந்த தேர்வர்களுக்காக பயிற்சி அளிக்க தாமாகவே முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிற்சி நடைபெறும் 40 நாள்களுக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உணவும், தேநீர் மற்றும் சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் இணைய விரும்பும் மாற்றுத் திறனாளிகள் அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களையோ அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்கள் உமா, ஸ்ரீதேவி, சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ஆர்.ஐயப்பன் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா