அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக, விடுமுறையில் செல்லும் போது, "விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்' என, பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில் மேற்படிப்பு அல்லது பணி தொடர்பாக, படிக்க விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு, விடுமுறையில் செல்லும் போது, கடன் மற்றும் பணம் செலுத்த வேண்டியிருந்தால், அதை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, பத்திரம் அளிக்க வேண்டும். இதுதான் தற்போதுள்ள நடைமுறை. ஆனால், சிலர், விடுமுறை முடிந்ததும், பணிக்கு திரும்பாமல், வேறு வேலைக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக, புது அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, படிப்புக்காக விடுமுறையில் செல்பவர்கள், "விடுமுறை முடிந்ததும், மீண்டும் பணியில் சேர்வேன்' என, உத்தரவாதம் அளித்து பத்திரம் அளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட விடுமுறை முடிந்ததும், அடுத்த நாளே, ஊழியர் பணிக்கு சேர வேண்டும்' என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...
Comments
Post a Comment