Skip to main content

பிளஸ் 2 பொதுத் தேர்வு: கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு 'ரூட் ஆபீசர்' பதவி

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தேர்வு மையத்தில், புதிய பணியிடம் ஒன்றை, அரசு தேர்வு துறை தோற்றுவித்துள்ளது. தேர்வு மையங்களில், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், எழுத்தர், இளநிலை உதவியாளர் ஆகியோர், தேர்வுக்கான முன் ஏற்பாடுகளை கவனித்தல், தேர்வு அறை அமைப்பு, வினாத்தாள், விடைத்தாள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபடுவர். தற்போது, தேர்வு துறை, அந்தந்த மாவட்டங்களில், சொந்தமாக கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் குறித்து, பட்டியல் எடுத்து வருகிறது; அவர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். அவருடன், கூடுதலாக, மற்றொரு ஆசிரியரும் பணியமர்த்தப்படுவார்.
அருகருகே உள்ள, மூன்று தேர்வு மையங்கள், இவர்களது பொறுப்பில் விடப்படும். இந்த ரூட் ஆபீசர்கள், காரில், வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் இருந்து, வினாத்தாள்களை எடுத்து, தேர்வு மையத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்; தேர்வு முடிந்தவுடன், விடைத்தாள்களை சேகரித்து, உரிய மையங்களில் ஒப்படைக்க வேண்டும். விடைத்தாள்களின் பாதுகாப்பிற்காக, தேர்வு துறை, இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்