Skip to main content

அரசு ஊழியருக்கு ஃபிப்., 28ல் மாவட்ட விளையாட்டு போட்டி

பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது வெளியிட்ட அறிக்கை:

ஆண்களுக்கு தடகள போட்டிகளான 100, 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 *100 மீட்டர் தொடர் ஓட்டம், பெண்களுக்கு 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 * 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டி, குழுப்போட்டிகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, கூடைப்பந்து, கபடி, கையுந்து பந்து போட்டிகளும், ஆண்களுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது.

ஃபிப்., 28ம் தேதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி, ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளும், மார்ச் 1ம் தேதி தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து, டென்னிஸ் போட்டிகளும் நடக்க உள்ளது.

ஒரு அரசு ஊழியர், ஒரு தனிநபர் போட்டியிலும் (தடகளம்), ஒரு குழுப்போட்டியிலும் பங்கேற்கலாம். தனிநபர் போட்டியில் முதலிடம் பிடிக்கும் நபர்களும், குழுப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் நபர்களும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், தங்களது அலுவலகம் மூலம் சிறப்பு தற்செயல் விடுப்பு பெற்று வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனி நபர் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கும், குழுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் இரண்டு இடங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தனி நபர் மற்றும் குழுப்போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்போருக்கும், அணி மேலாளர்கள் 15 நபர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படும். பள்ளி கல்வி துறையில் உடற்கல்வி ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களும், அலுவலக உதவியாளர்களும், போலீஸ் துறையில் போலீஸை தவிர அலுவலக உதவியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

மத்திய அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் மற்றும் கார்ப்பரேசன், கூட்டுறவு ஊழியர்கள் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 95000-74838 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

போட்டிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் தங்களது பெயரை ஃபிப்., 26ம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்