Skip to main content

15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவிப்பு

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம் முழுவதும், 15 ஆயிரம், பி.எட்., கணினி பட்டதாரிகள்,வேலையில்லாமல் தவித்து வருகின்றனர் .தமிழகத்தில், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இலவசமாக கணினி, லேப்-டாப் ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் இல்லாததால், அவை, பயன்படுத்தப்படாமல், முடங்கிகிடக்கின்றன. அதே சமயம், தனியார் பள்ளிகளில், கணினிகல்விக்காக, தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனாலும், பெற்றோர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். 
எனவே,அரசு பள்ளிகளிலும், கல்வி தரம் உயர, கணினி பாடப்பிரிவு துவங்கி, அதற்கான,ஆசிரியர்களை நியமிக்கவேண்டுமென, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, 'ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை,கணினி பாடப்பிரிவு துவங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது; ஆனால், செயல்படுத்தவில்லை. இதனால், கணினி துறையில், அரசு பள்ளி மாணவர்கள் பலர் ஈடுபாடு காட்டுவதில்லை. கணினி பாடப் பிரிவில்,பி.எட்., முடித்த பட்டதாரிகளும், வேலையில்லாமல் தவித்துவருகின்றனர் 
.பி.எட்., கணினி பட்டதாரிகள்கூறியதாவது:மாநிலம் முழுவதும், 15 ஆயிரம் கணினி பட்டதாரிகள், வேலைக்காக காத்திருக்கிறோம்.அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு உள்ளது. ஆனால், பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை,கணினிக்கு என, தனியாக பாடப்பிரிவு இல்லை. பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில், கணினி ஆசிரியர் 
பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.-

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்