Skip to main content

10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் வருமா? முடிவுக்கான கோப்பு.........

பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், வழக்கமான பொது தேர்வு இருக்குமா அல்லது முப்பருவ கல்வி முறையின்படி, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுமா என்பன குறித்து, கல்வித்துறையில், பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. 


தமிழகத்தில் தற்போது, ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, அமலில் உள்ளது. இதை தொடர்ந்து, 10ம் வகுப்பிற்கும், முப்பருவ கல்வி முறை, நீட்டிப்பு செய்யப்படுமா அல்லது தற்போதுள்ள முறையே தொடர்ந்து பின்பற்றப்படுமா என்பது தெரியாமல், ஆசிரியர், மாணவர், பெற்றோர் என, அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். 



எச்சரிக்கை:
அடுத்த கல்வி ஆண்டு துவக்கம், நெருங்கிக் கொண்டிருப்பதால், என்ன செய்வது என்று புரியாமலும், அதிகாரிகள், திணறுகின்றனர். எந்த முடிவாக இருந்தாலும், முன்கூட்டியே அறிவித்தால், யாருக்கும், எந்த பிரச்னையும் இருக்காது. கடைசி நேரத்தில், பெரிய அளவில் மாற்றத்தை அறிவித்தால், அது, மாணவர்களுக்கு, பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என, ஆசிரியர் எச்சரிக்கின்றனர். இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி திறப்பதற்கு, இன்னும், மூன்று மாதங்கள் உள்ளன; அதற்குள், முடிவை அறிவித்து விடுவோம்' என்றார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்