Skip to main content

RMSA மூலம் அரசுப் பள்ளிகளில் ரூ.161 கோடியில் வகுப்பறை,ஆய்வுக்கூடம்: கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பு.

தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் ரூ.161 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் 2010-11ம் கல்வி ஆண்டில் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,851 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 698அறிவியல் ஆய்வகங்கள் கட்ட ரூ.146.78 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இப்பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக, கூடுதல் நிதியாக ரூ.71.18 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.ஒரு வகுப்பறையின் மதிப்பீடு ரூ.8.53 லட்சம், ஆய்வக மதிப்பீடு ரூ.9.03 லட்சம். இத்திட்டத்தின்கீழ், 32 மாவட்டங்களில் 1,339 வகுப்பறைகள், 528 அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கட்டிடப் பணிகளை மேற் கொள்ள மாவட்டங்களில் உள்ள நிதியை பொதுப்பணித் துறைக்கு காசோலை மூலம் வழங்க வேண்டும். 

மத்திய அரசால் அறிவுறுத்தியுள்ள பள்ளிகளில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய பள்ளிகளின் பட்டியலையும் பொதுப்பணித் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதில் இருப்பு வைக்கப்படும்தொகைகள், கூடுதல் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். அனைத்து மாவட்ட திட்ட இயக்குநர்களின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொதுப்பணித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் ஒத்துழைப்புடன் இப்பணிகள் நடைபெற்றுவந்தன. 

ஆனால், அதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் நிலவுவதால், பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மூலம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தொகையில் முறையாகப் பணிகள் நிறைவடைய இதுவே சிறந்தது’ என அவர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு