இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள், தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த, இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி, தலைமைப் பண்பு பயிற்சி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள்,தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை மேம்படுத்த, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில், இரண்டாவது கட்டமாக, இளம் தலைமையாசிரியர்களுக்கு, தலைமைப் பண்பு பயிற்சி, பிப்ரவரி, 3ம் தேதியில் இருந்து, 8ம் தேதிக்குள், மூன்று நாட்கள், அந்தந்த மாவட்டங்களில், நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், உயர் தொழில்நுட்ப முறையில், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் - மாணவர் உறவு, மாணவர்களின் திறனை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு
Comments
Post a Comment