Skip to main content

தமிழக முழுவதும் 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக முழுவதும் 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் 27 விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட ஒரு விடுதிக்கு ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தற்போது பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகள், 42 பழங்குடியினர் விடுதிகள் என மொத்தம் 1,342 மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.


மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்க அதிக விடுதிகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான புதிய விடுதிகள் தொடங்குவதற்கும், வாடகைக் கட்டிடங்களில் இயங்கிவரும் விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.


அதன்படி, இந்த ஆண்டு வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் 54 விடுதிகளில், அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், தூத்துக்குடி மாவட்டத்திற்கு தலா ஒன்றும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 விடுதிகள், சேலம் மாவட்டத்தில் 2 விடுதிகள், சிவகங்கை மாவட்டத்தில் 3 விடுதிகள், திருச்சி மாவட்டத்தில் 2 விடுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 விடுதிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 4 விடுதிகள் என மொத்தம் 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்டப்படுகிறது.


இந்த 27 விடுதிகள் கட்ட விடுதி ஒன்றுக்கு ரூ.1 கோடி வீதம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுதிகளில் 5 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் கலன் அமைப்பு நிறுவப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கை, நல்ல கட்டமைப்பு வசதியுடன் கூடிய விடுதிகளில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்க வழிவகை ஏற்படும். அவர்கள் கல்வியில் மேன்மை அடைய இயலும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்