Skip to main content

பிளஸ் 1 வகுப்புக்கு, பழைய பாடத்திட்டமே, தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன

பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும், பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கான, பாடத்திட்டத்தை மாற்றியமைத்து, பல ஆண்டுகளாகி விட்டதால், இரு ஆண்டுகளுக்கு முன், புதிய பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால், அதன்பின், பாடத்திட்டம் எழுதும், ஆசிரியர் குழு அமைப்பது உள்ளிட்ட, பணிகள் துவங்கப்படவில்லை. இன்னும், நான்கு மாதங்களில், அடுத்த, கல்வியாண்டு துவங்கிவிடும்; அதற்குள், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் தயாராவது கடினம். 
எனவே, வரும் கல்வியாண்டிலும், மீண்டும், பழைய பாடத்திட்டமே, தொடர்வது உறுதியாகி உள்ளது.
வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்பில், முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின், அதை பிளஸ் 1 வகுப்புக்கும், விரிவாக்கம் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்புக்கான, 
முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்படுமா என்பதே, சந்தேகமாக உள்ளது. அதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வந்தாலும், பொதுத்தேர்வு என்பதால், மதிப்பீடு செய்வதில், குளறுபடி வருமோ என்ற அச்சம், ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, 10ம் வகுப்புக்கு, முப்பருவக்கல்வி முறையை, சிக்கல் 
இல்லாமல், அமல்படுத்துவதில் மட்டுமே, அதிகாரிகள் கவனமாக உள்ளனர். பிளஸ் 1 பாடத்திட்டம் குறித்து, யோசிக்கும் நிலையில் இல்லை.கடந்த முறை, சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கப்பட்ட, அடுத்த ஆண்டே, மீண்டும், முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதே போன்று அமையாமல், 10ம் வகுப்பு, முப்பருவக்கல்வி முறையை, நல்ல முறையில் அமல்படுத்திய பின், அடுத்த கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும், அதே பாணியில், பிளஸ் 2 வகுப்புக்கும், முப்பருவக்கல்வி முறையை, மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.இதனால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு, பழைய பாடத்திட்டமே, தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்