Skip to main content

புது 'பான்கார்டு' பெற இனி ரூ.105 கட்டணம்

வருமான வரித்துறை வழங்கும், 'பான்கார்டு' பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்த வேண்டும்.பான்கார்டு பெறுவதற்கான நடைமுறைகளை, வருமான வரித்துறை சில கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஒருவரே, பல பான் கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக, குற்றச்சாட்
டு எழுந்தது.இதையடுத்து, பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் சான்றிதழின் நகல், முகவரி, பிறந்த தேதிக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.பின், விண்ணப்பத்தை பான்கார்டுக்கான விண்ணப்ப மையங்களில், அளிக்கும்போது, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு காட்ட வேண்டும்.
சரிபார்ப்புக்கு பின், அசல் சான்றிதழ்கள் விண்ணப்பத்தாரிடம் திரும்ப அளிக்கப்படும். இது, பிப்ரவரி, 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.அத்துடன், புது பான்கார்டு வாங்குவதற்காக, வருமான வரித்துறை வசூலிக்கும் கட்டணம், வரிகள் உட்பட, 105 ரூபாய் ஆக உயர்கிறது. இப்போதுள்ள கட்டணம், 94 ரூபாய்; 11 ரூபாய் உயர்கிறது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்