Skip to main content

10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிப்பு

நடப்பாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26ம் தேதியும் துவங்குகிறது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட, புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், 20 நாளில் தேர்வு முடிவு என, பல அதிரடி நடவடிக்கை, நடப்பு கல்வியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய, "நாமினல்ரோல்' தயாரிக்கப்பட்டு, ஆன் - லைன் மூலம், நேரடியாக, பள்ளியில் இருந்து, தேர்வுத் துறைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதல், தேர்வு முடிவு வெளியான உடன், மாணவர்களை அலைக்கழிக்காமல் இருக்க, வேலைவாய்ப்பு பதிவு, பள்ளியிலேயே செய்யப்படுகிறது.
இதில், வேலைவாய்ப்பு பதிவுக்கு, ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. கடைசி நேரத்தில், ரேஷன் கார்டு குறித்த, குளறுபடிகளை தவிர்க்க, நடப்பாண்டில், "நாமினல்ரோல்' தயாரிக்கும் போதே, ஒவ்வொரு மாணவரின், ரேஷன் கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், தேர்வு முடிவு வெளியான உடன், வேலைவாய்ப்புக்காக, பதிவு செய்வது மிக எளிதாக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்