Skip to main content

பான் கார்டின் முக்கியத்துவம்

பான் கார்டு’ எனப்படும் ‘நிரந்தரக் கணக்கு அட்டை’ இன்று அவசியமாகி வருகிறது. ஆனால் இன்றும் பலர் இதன் முக்கியத்துவத்தை அறியவில்லை. எனவே பான் கார்டு பற்றிய விளக்கமான தகவல்களைப் பார்ப்போம்…
Permanent Account Number என்பதின் சுருக்கமே பான் கார்டு. தற்போது வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் பண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. நிரந்தரக் கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.

இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு 100 ரூபாய்க்குள்தான செலவாகும். புரோக்கர் மூலமாகப் பெறுவதற்கு ரூ. 250 செலவாகலாம். ‘பான் கார்டின்’ அவசியம்:

1. ரூ. 5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு அவசியம்.

2. மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின்போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக).

3. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் ‘பிக்சட் டெபாசிட்’ செய்யும்போது அவசியம்.

4. அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் ‘பிக்சட் டெபாசிட்’ ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டும்போது அவசியம்.

5. ஒப்பந்த மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மிகும் போது தேவைப்படும்.

6. வங்கிக் கணக்கு துவங்கும்போது.

7. தொலைபேசி, செல்போன் இணைப்புப் பெற விண்ணப்பிக்கும்போது.

8. தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்குச் செலுத்தும் கட்டணம் ரூ. 25 ஆயிரத்துக்கு அதிகமாகும்போது அவசியம்.

9. ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD / Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமாகச் செலுத்தும்போது அவசியம்.

10. வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய அவசியம்.

11. சேவை வரி மற்றும் வணிக வரித்துறையில் பதிவுச் சான்று பெற Pan Card கட்டாயமாகும்.

12. முன்பு, மியூச்சுவல் பண்டில் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும்போதுதான் பான் கார்டு அவசியமிருந்தது.

ஆனால், தற்போது மியூச்சுவல் பண்டில் எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா