Skip to main content

கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - ஸ்லீப், ஹைபர்னேட், ஷட் டவுண் எது வேண்டும்?

அனைத்து பணிகளையும் முடித்த பின்னர், நாம் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகிறோம். தொடர்ந்து ஒரு மணி நேரம் வேலை பார்த்த பின்னர், சிறிது ஓய்வு எடுக்க எண்ணுகிறோம். அப்போதும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திட வேண்டுமா? அப்படியானால், அப்போது கம்ப்யூட்டரை ஸ்லீப் நிலைக்குக் கொண்டு செல்லலாமா? அல்லது ஹைபர்னேட் நிலையில் வைக்கலாமா? இந்த குழப்பத்திற்கான தீர்வை இங்கு காணலாம்.
முதலில் இந்த சொற்கள் கம்ப்யூட்டரின் எந்த செயல்பாட்டினைக் குறிக்கின்றன எனச் சற்றுத் துல்லியமாகப் பார்ப்போம். கம்ப்யூட்டர் ஒன்று sleep அல்லது stand by நிலைக்குச் செல்கையில், முதலில் அதன் காட்சித் திரை, வீடியோ கார்ட், சிபியு மற்றும் ஹார்ட் ட்ரைவ் மூடப்படுகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்கள் இயங்காது. கம்ப்யூட்டர் கடைசியாக இருந்த நிலையை, (திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்த சாப்ட்வேர் போன்றவற்றை) ராம் (RAM) மெமரிக்குக் கொண்டு செல்கிறது. இதற்கு "trickle charge” என அழைக்கப்படும் மிகச் சிறிய அளவிலான மின்சாரம் இதனை வைத்திருக்க தேவைப்படுகிறது. ராம் நினைவகம் ஒரு தற்காலிக நினைவகம் என்பதால், கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்யப்பட்டால், அதன் நினைவில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும். எனவே தான், குறைவான பேட்டரி திறன் உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்களில், ஸ்லீப் மோடில் நுழையும் முன், மின்சக்தி, அதனைத் திருப்பி ஸ்லீப் மோடில் இருந்து எழுப்பும் வரையில் தாக்குப் பிடிக்குமா என அறிந்து கொள்வது நல்லது. ஸ்லீப் நிலையைப் பொறுத்தவரை, நாம் எப்போது திரும்பி வந்து அதனை வேக் அப் நிலைக்கான கொண்டுவரும் பட்டனைத் தட்டியவுடன், அனைத்து புரோகிராம்களும் உடனே செயல்பாட்டிற்கு வரும். எனவே, இரண்டு மணி நேரம் நாம் கம்ப்யூட்டரை விட்டுவிட்டு செல்வதாக இருந்தால், ஸ்லீப் மோடில் போட்டுவிட்டு செல்லலாம்.
ஹைபர்னேஷன் (Hibernation) நிலையில், கம்ப்யூட்டர் ராம் நினைவகத்தில் உள்ளதை, ஹார்ட் ட்ரைவில் எழுதிப் பின்னர் ஷட் டவுண் செய்து கொள்கிறது. எனவே ஹைபர்னேஷன் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் மின் சக்தியினைப் பயன்படுத்தும் கேள்வியே எழவில்லை. இந்நிலையிலிருந்து கம்ப்யூட்டரை மீன்டும் கொண்டு வருகையில், கம்ப்யூட்டரில் திறந்து இயக்கிக் கொண்டிருந்த அனைத்து புரோகிராம்களும் செயல்பாட்டிற்கு வரும். வழக்கமான ஷட் டவுண் செய்து பின்னர் மீண்டும் செயல்படுத்தப்பட எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் காட்டிலும், குறைவான நேரமே இதற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் ஹைபர்னேஷனில் இருக்கையில், எந்த புரோகிராமும் இயங்காது.
பவர் ஆப் (Power Off) என்பது, இந்த சொற்களைப் பார்க்கும் போதே என்னவென்று தெரியவரும். ஷட் டவுண் செய்து, கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தி, சிபியு உட்பட அனைத்தையும் ஆறப் போட்டு விடுவது. வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டோம்; இனி வெகு நேரம் கம்ப்யூட்டருடன் வேலை இல்லை என்ற நிலையில் இந்த நிலையை எடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன