Skip to main content

சாப்ட்வேர், ஹார்ட்வேர், பர்ம் வேர்,மால்வேர்,யூசர் வேர் இவற்றிற்கு இடையே உள்ள பொருள் வேறுபாட்டினை நாம் துல்லியமாக உணரமுடியவில்லை. அதனை இங்கு காணலாம்.

1. சாப்ட்வேர் (SOFTWARE): விண்டோஸ், லினக்ஸ், ஆபீஸ், பேஜ் மேக்கர், பிளாஷ் போன்றவை சாப்ட்வேர் புரோகிராம்களாகும். உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து, நீங்கள் இயக்கும் எந்த புரோகிராமும் சாப்ட்வேர் புரோகிராம் ஆகும். இதில் விண்டோஸ், லினக்ஸ் போன்றவை சிஸ்டம் சாப்ட்வேர்கள் எனவும் மற்றவை அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை தனியான பொருட்கள் அல்ல. பிட்ஸ் அண்ட் பைட்ஸ் என அழைக்கப்படும் குறியீடு வரிகளால் ஆனவை.
2. ஹார்ட்வேர் (HARDWARE): மதர்போர்ட், ஹார்ட் ட்ரைவ், சிடி ட்ரைவ், மானிட்டர் ஆகியவை ஹார்ட்வேர் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரின் ஒரு பகுதியாக, ஒரு பொருளாக இணைக்கப்பட்டு இயக்கப்படுபவை ஹார்ட்வேர் ஆகும். இவை தான் கம்ப்யூட்டரை இயங்க வைக்கின்றன. இவை இல்லாமல், சாப்ட்வேர் மட்டும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைத் தர முடியாது.
3. பர்ம்வேர் (FIRMWARE) : உங்கள் ஹார்ட்வேரை, இயங்கு என்று முதலில் கட்டளையிட்டு, இயங்க வைக்கும் புரோகிராம் பர்ம்வேர் ஆகும். பர்ம் வேர் என்பதற்கான பொதுவான ஒரு பெயர் ட்ரைவர் ("driver”) ஆகும். ஏனென்றால், இவை தான் உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களை ஓட்டும் புரோகிராம்கள். எனவே, உங்கள் கேமரா அல்லது வேறு ஒரு சாதனம் தேவை எனக் கேட்டு செய்தி காட்டினால், அது இதனைத்தான் குறிக்கிறது. ட்ரைவர் புரோகிராம்கள் மேம்படுத்தப்பட்டு இருந்தால், அவை டவுண்லோட் செய்யப்பட்டு, புதிய திறனுடன் இயக்கப்படும்; அல்லது மால்வேர் புரோகிராம்கள் பாதிக்காத வகையில் கூடுதல் பாதுகாப்பினை வழங்கும்.
இவற்றுடன் இன்னும் சிலவற்றைத் தெரிந்து கொள்வது நல்லது. அவை:
4. அட்வேர் (ADWARE): இது தானாக, உங்கள் கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்து கொண்டு, விளம்பரங்களைக் காட்டி உங்களுக்கு எரிச்சலைத் தரும். எப்போது பிரவுசரின் விண்டோ ஒன்றைத் திறந்தாலும், இவை நம் முன்னால் தோன்றி காட்சி அளிக்கும்.
5. மால்வேர் (MALWARE): வைரஸ்கள், ட்ரோஜன் ஹார்ஸ் என அழைக்கப்படும் வைரஸ்கள் மற்றும் நம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் இடையூறு விளைவிக்கும் அல்லது முடக்கிப் போடும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மால்வேர் ஆகும்.
6. யூசர் வேர் (USERWARE): மேக்ரோ புரோகிராம்கள், ஆட் ஆன் புரோகிராம்கள் போன்றவற்றை இவ்வாறு அழைக்கிறோம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களால் உருவாக்கப்பட்டு நமக்கு இணையம் வழியாகவோ, அல்லது வேறு வழியாகவோ கிடைக்கும் புரோகிராம்கள் யூசர்வேர் ஆகும். மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இது போன்ற யூசர்வேர் நிறைய கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் பிரவுசருக்கும் இது போல பல உள்ளன. தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கும் இவை நிறைய கிடைக்கின்றன. குறிப்பிட்ட நிறுவனங்கள், இவற்றை அங்கீகரித்த பின்னரே இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது நல்லது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்