Skip to main content

ஹார்ட் டிஸ்க்கை எளிதாக பிரிக்கும்மென்பொருள்

முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும்.

இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில், எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard). இதனைhttp://www.partitionwizard.com/freepartitionmanager.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம்.

இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை செயல்பாடுகள்:

1. ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.

2. அனைத்து பிரிவுகளையும், அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினை மற்றவற்றிற்கு இணையாக அமைக்கலாம்.

3. டேட்டா இழப்பு எதுவுமின்றி, ஒரு பிரிவின் அளவைக் குறைக்கலாம். அல்லது நகர்த்தலாம். பிரிவு ஒன்றை உருவாக்கலாம்; பார்மட் செய்திடலாம்; நீக்கலாம்.

4. பார்ட்டிஷன் பார்மட்டினை FAT வகையிலிருந்து NTFS பார்மட்டுக்கு மாற்றலாம்.

5. பிரிவுகளை மறைக்கலாம்; மறைத்ததை மீண்டும் கொண்டு வரலாம். ட்ரைவ் லேபில் எழுத்தை மாற்றலாம்.

6. பிரிவுகளை இணைக்கலாம்.

7. ஒரு பிரிவில் உள்ளதை அப்படியே காப்பி செய்து, ஒதுக்கப்படாத இடத்தில், அதிக திறன் கொண்ட செயல்பாட்டினைத் தரும் வகையில் அமைக்கலாம்.

8. டேட்டாவினை பேக் அப் செய்திடலாம்; அல்லது எந்தவித இழப்புமின்றி நகர்த்தலாம்.

9. டிஸ்க் ஸ்கேன் செய்து அழிக்கப்பட்ட பைல்களை மீட்டு எடுக்கலாம் அல்லது கெட்டுப்போன இடத்திலிருந்து மீட்டு எடுக்கலாம்.

10. டிஸ்க் ஒன்றினை முழுவதுமாக, இன்னொரு டிஸ்க்கிற்கு காப்பி செய்திடலாம். இதற்கு data clone technology என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

11. டிஸ்க்கின் டேட்டாவினை எந்த இழப்புமின்றி, பத்திரமாக பேக் அப் செய்திடலாம்.

12. டிஸ்க் எந்த இடத்திலேனும் கெட்டுப் போயுள்ளதா என அறிந்து, அறிக்கையாகத் தர டிஸ்க் சர்பேஸ் டெஸ்ட்டினை (Disk Surface Test) இதில் மேற்கொள்ளலாம்.

இன்னும் சில சிறப்பான பணிகளை இதில் எளிதாக மேற்கொள்ளலாம். அவை:

1. NTFS வகையிலிருந்து FAT வகைக்கு மாற்றுதல்.

2. எழுத்துருவினை மாற்றுதல்.

3. MBR வகை டிஸ்க்கினை GPT டிஸ்க்காக மாற்றுதல்.

4. GPT வகை டிஸ்க்கினை MBR டிஸ்க்காக மாற்றுதல்.

5. டைனமிக் டிஸ்க் வால்யூமினை காப்பி செய்தல்.

6. UEFI பூட் டிஸ்க்கினை காப்பி செய்தல்.

7. UEFI பூட் செயல்பாட்டிற்கான சப்போர்ட் வழங்குதல்.

8. பிரிக்கப்பட்ட பார்ட்டிஷன் ஏரியாவை நீட்டுதல்.

9. ஒரு பார்ட்டிஷனை எளிதாக இரண்டாகப் பிரித்தல்.

10. 4096 பைட் அடங்கிய செக்டார் அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் அமைத்தல்.

11. எந்த பார்ட்டிஷனையும் உருவாக்குதல், பார்மட் செய்தல் மற்றும் நீக்குதல்.

12. டேட்டா இழப்பு எதுவுமின்றி, க்ளஸ்டர் அளவினை மாற்றி அமைத்தல்.

13. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களுக்கு சப்போர்ட்.

14. உங்களுடைய டிஸ்க்கிற்கு என்ன நடக்கப் போகிறது என்ற காட்சியைக் காட்டி, பின்னர் உறுதி செய்த பின்னரே, அந்த செயல்பாட்டினை மேற்கொள்ளுதல்.

15. இரண்டு டெரா பைட் அளவிலான டிஸ்க்கினையும் ஒரே பார்ட்டிஷனாக அமைத்து சப்போர்ட் செய்தல்.

16. மாஸ்டர் பூட் ரெகார்டினை (MBR) மீண்டும் அமைத்தல்.

17. பார்ட்டிஷனின் சீரியல் எண்ணை மாற்றி அமைத்தல்.
இவை தவிர, வழக்கமான பல டிஸ்க் சோதனைகளையும் மேற்கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்ட இணைய தளத்திலிருந்து, இந்த புரோகிராமினை (MiniTool Partition Wizard) இலவசமாகத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில்,மிக எளிதாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இன்ஸ்டால் செய்தவுடன், டெஸ்க்டாப்பில் ஐகான் ஒன்று தரப்படுகிறது. இதில் டபுள் கிளிக் செய்து, MiniTool Partition Wizard Home Edition என்னும் இந்த புரோகிராமினை இயக்கலாம். உடன் வலது பக்கம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் பிரிவுகள் அனைத்தும் தெளிவாகக் காட்டப்படும். வலது பக்கம், இவற்றில் நீங்கள் என்ன என்ன செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தகவல்கள் தரப்படும்.

இடது பக்கம் உள்ள ஹார்ட் டிஸ்க் குறித்த பிரிவில், டிஸ்க் பயன்படுத்தப்பட்டுள்ள இடம், இன்னும் காலியாக உள்ள இடம் குறித்த தகவல்கள் காட்டப்படும்.
இடது பக்கப் பிரிவில், டிஸ்க் ஒன்றினை அப்படியே அதே அளவில், அல்லது கூடுதலான அளவில் காப்பி எடுக்க வழி தரப்பட்டுள்ளது. copy partition மற்றும் copy entire disk என்ற இந்த டூல்களைப் பயன்படுத்தி இதனைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கின் நகலை, இன்னொரு எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கலாம். மிக மிக எளிதான, கட்டணம் எதுவும் இல்லாத பயனுள்ள டூல் இது. உங்களுடைய கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் கெட்டுப்போகும் பொழுது, அப்படியே அதன் காப்பி உங்களுக்கு உதவும்.

இதில் தரப்பட்டுள்ள disk surface scan என்ற டூல், டிஸ்க்கில் உள்ள பழுதுகளை அறியப் பயன்படுகிறது. ஹார்ட் ட்ரைவ் அல்லது அதன் பிரிவைத் தேர்ந்தெடுத்து, அடுத்து Surface Test என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் எந்த நிலையில் உள்ளது, எத்தனை இடங்களில் பேட் செக்டார் எனப்படும் பழுதுகள் உள்ளன என்று காட்டப்படும். அதிகமாக பழுது அடைந்திருந்தால், உடனே ஹார்ட் டிஸ்க்கை மாற்றுவதுதான் சிறந்த தீர்வு.

ஹார்ட் டிஸ்க் சார்ந்த எக்கச்சக்கமான செயல்பாடு, எளிதான இடைமுக வழிகள், எந்தக் கட்டணமும் இல்லாத பொருள் என இந்த MiniTool Partition Wizard புரோகிராம், அனைவரும் விரும்பும் புரோகிராமாக உள்ளது. உடனடியாகப் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் வைத்துக் கொள்வது நமக்கு என்றும் கை கொடுக்கும்.

இதனைத் தரவிறக்கம் செய்திடவும், இதன் செயல்பாடு குறித்து அறிய, மேலே தரப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு