Skip to main content

ஐகோர்ட் நீதிபதியாக வேலுமணி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதியாக, வி.எம்.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். 
அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாளைமறுநாள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா, கனக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வி.எம்.வேலுமணி. 1962, ஏப்ரலில் பிறந்தார்.
பழநியில் உள்ள, பழநி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.ஏ., பட்டம், மதுரை காமராஜர் பல்கலையில், எம்.ஏ., (அரசியல் அறிவியல்) பட்டம், சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். 1989ல், வழக்கறிஞராக பதிவு செய்தார்."அய்யர் அன்ட் டோலியா' அலுவலகத்தில், வழக்கறிஞராக சேர்ந்து, "பிராக்டீஸ்' செய்தார். 

1998 - 99ல், மத்திய அரசு வழக்கறிஞராகவும், 2001 06ல், கூடுதல் அரசு பிளீடராகவும் பணியாற்றினார். 2011 முதல், சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றி வந்தார்.உயர்நீதிமன்ற நீதிபதியாக, வி.எம்.வேலுமணி, தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். நீதிபதியாக நாளை மறுநாள், பதவி ஏற்கிறார். அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நீதிபதி வேலுமணி பதவி ஏற்பதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் உள்ள, நீதிபதிகளின் எண்ணிக்கை, 47 ஆக உயர்கிறது

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்