Skip to main content

கணினியை முடக்கும் கிறிப்டோலாக்கர் வைரஸ்

இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டோ லாக்கர் (‘CryptoLocker’) வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது. கம்ப்யூட்டரில் பரவியவுடன், மிக மிக முக்கியமான டாகுமெண்ட்களைத் திருடி, பின்னர் அவற்றில் உள்ள விஷயங்களை வெளியிடாமல் இருக்க, பெரும் அளவில் பணம் தரவேண்டும் என, இந்த வைரஸை அனுப்பியவர்கள் மிரட்டுகின்றனர்.
பணத்தை, அடையாளம் தெரியாமல் பெற, பல வழிகளைக் கையாள்கின்றனர். ஆள் பெயர் குறிப்பிடாத, ப்ரீ பெய்ட் வவுச்சர் மூலம் பணம் பெறுவது இந்த வழிகளில் ஒன்றாகும்.இந்தியாவில் இந்த வைரஸ் பாதித்தவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், பலர் இதனை வெளியே கூறாமல் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த வைரஸ் பரவுவது தற்போது அதிகரித்து வருவதாகவும், காவல் துறை எச்சரித்துள்ளது.

ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் கண்காணிப்புப் பார்வையிலிருந்து தப்புவதற்கு, இந்த வைரஸ் ஏழு வெவ்வேறு பெயர்களில் பரவி வருகிறது. இது Win32/Trojan என்ற வகையைச் சேர்ந்தது என ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கெடுதலைத் தரும் தளங்களுக்கான தவறான லிங்க், ஸ்பேம் மெயில்கள் வழியாக, லிங்க் கொடுத்து இழுத்துச் செல்லல், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை, கவர்ந்திழுக்கும் வகையில் இணைப்புகளாக அனுப்புதல் எனப் பல வழிகளில், இந்த வைரஸ் பரவுகிறது.
வைரஸ் பரவிய கம்ப்யூட்டர்களில், ட்ரைவ்களில் உள்ள பைல்களைத் தன் வழியில் சுருக்கி அமைக்கிறது. இந்தக் கம்ப்யூட்டர் இணைந்துள்ள நெட்வொர்க்கில் இயங்கும் மற்ற கம்ப்யூட்டர்களில் இயங்கும் ட்ரைவ்களில் உள்ள பைல்களையும் இதே போல் சுருக்கி அமைக்கிறது. இவற்றை மட்டுமின்றி, இந்த வைரஸ், கம்ப்யூட்டரில் இணையும், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள பைல்களையும் விட்டு வைப்பதில்லை. இணைக்கப்படும் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் பைல்களையும் பதம் பார்க்கின்றன.

இவை எல்லாவற்றைக் காட்டிலும், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், அந்த கம்ப்யூட்டர் இணைக்கப்படுகையில், RSA publickey cryptography என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வசதியை வழங்கும் சர்வரிலும் தன் வேலையைக் காட்டுகிறது. இதனை இந்தியாவில் இயங்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு எச்சரிக்கை தகவலாகத் தந்துள்ளது.

இவ்வாறு பைல்களைத் தன் வழியில் சுருக்கி வைத்த பின்னர், கம்ப்யூட்டர் பயனாளருக்கு, தான் பைல்களைக் கைப்பற்றி வைத்திருக்கிறது என்பதனையும், அதனை மீட்க வேண்டுமானால், எப்படி எதன் மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்பதனையும் அறிவிக்கிறது. பெயரில்லாத, ப்ரீ பெய்ட் கேஷ் வவுச்சர்களைத் தரும் நிறுவனங்கள் வழியாக (Money Pak or Ukash), or 2 Bitcoin,”) இதனைக் கேட்கிறது. ஏமாந்தவர் பணம் செலுத்தியபின்னர், சுருக்கப்பட்ட பைல்களுக்கான கீ யை அனுப்புகிறது.

சமூக வலைத் தளங்களில், முன் பின் தெரியாதவர்கள் அனுப்பிய லிங்க்குகளில் கிளிக் செய்வது, பழக்கமற்றவர்களின் மின் அஞ்சல் இணைப்புகளை டவுண்லோட் செய்து இயக்குவது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்தால், இது போல வைரஸ் பரவுவதனைத் தடுக்கலாம் என காவல் துறை எச்சரித்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு