டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தில், புதிய முறையை இந்திய மாணவர்கள் கண்டுபிடித்துஉள்ளனர். இதனால் நேரம் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. போக்குவரத்து அதிகம் நடைபெறும் மூன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் சந்திக்கும் இடங்களில், டிராபிக் சிக்னல்கள் உள்ளன. போக்குவரத்து தங்கு தடையின்றி செல்வதற்காக உருவாக்கப்பட்டது. இது ஒரு காலத்தில் போக்குவரத்து காவலர்கள் கை அசைவு மூலம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தானியங்கி டிராபிக் சிக்னல்கள் வந்துவிட்டன. அதிலேயே டைமர் பொருத்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு திசைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் செட் செய்யப்பட்டு, தானாகவே பச்சை மற்றும் சிவப்பு ஒளி விளக்குகள் மாற்றப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் தான், இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. புதிய தொழில்நுட்பம்தலைநகர் டில்லி அருகேயுள்ள சேட்டிலைட் நகரான குர்கானைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், புதிய டிராபிக் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தற்போது டைமர் மற்றும் கம்ப்யூட்டர் அல்காரிதம் பொருத்தப்பட்ட தானியங்கி சிக்னல்களில், ஒவ்வொரு திசைக்கும் எவ்வளவு நேரம் என்பது முன்னரே பதிவு செய்...